31.12.20
உலகம் உன் வசம்
உன் முனைப்பு உலகிற்கு பயன்தரட்டும்
உலகம் உன் வசம் என்றாகட்டும். !!
அகம் நிறைந்து பொங்கி பிரவாகிக்கட்டும்
ஆழ்மனதில் ஊற்றாய் அன்பு சுரக்கட்டும்
இன்முகம் என்றும் உன் முகமாய் இருக்கட்டும்
ஈகை எனும் குணம் மிகுந்திருக்கட்டும்
உரிமைக்கு குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
ஊக்கம் உன் உடல்மொழி ஆகட்டும்
எளிமையே உன் இயல்பாய் விளங்கட்டும்
ஏறுபோல உள்ளமென்றும் உறுதியாய் திகழட்டும்
ஐம்புலன்கள் யாவும் கட்டுண்டு நடக்கட்டும்
ஒற்றுமை நல்லிணக்கம் செயலில் மிளிரட்டும் ...
அது..
ஒளடதத்தை காலத்தே கையில் சேர்த்திடட்டும்
எஃகுபோல் இவ்வுலகம் ஆரோக்யம் கொள்ளட்டும்
உன் முனைப்பு உலகிற்கு பயன்தரட்டும்
உலகம் உன் வசம் என்றாகட்டும். !!
++