<$BlogRSDURL$>

28.4.04

சாளரமும் கையசைப்பும்! 

இன்று என் சாளரத்தின் வெளியே
எதையோ தேடி கொண்டிருந்தேன்.
ஒரு வேளை...

முந்தைய நாள் பெய்த மழையில்
நான் நனையாமலே நனைந்து போன
என் மனதின் நிழலுருவங்களாய் இருக்கலாம்.

"பொட்டி,படுக்கை" கட்டிட்டு சீக்கரம் வந்து சேரு
என்று சொல்லி நான் வருவதற்குள் இறைவனடி சேர்ந்த
பாட்டியின் அன்பையோ?! அரவணைப்பையோ மீண்டும் தேடியிருக்கலாம்.

உறவுகளில் தொலைத்த சந்தோசங்ளை
இன்று நட்பு-இட்டு நிரப்பும் முயற்சிகளில்
காணப்படும் நிறைவுகளின் நிறத்தை கண்டுகொள்ள முயற்சித்திருக்கலாம்.

செய்ய வேண்டும் என்று நினைத்து
செய்யாமல் போனதால் விழைந்த நன்மை-தீமைகளை
செதுக்கி வைக்கும் மனச்சிற்பியின் ஓசையாயிருக்கலாம்.

இவற்றின் நடுவே காரில் சென்ற சிறுமி ஒருத்தி...

தனது பிஞ்சுக் கரத்தை என்னை நோக்கி அசைத்தாள்
ஏனோ! குழந்தையாகி நானும் அதையே செய்தேன்
அவள் தகப்பனின் கேலிச் சிரிப்பையும் பொருட்படுத்தாமல்.

|

விடுதலை வேண்டும் 

விடுதலை வேண்டும்
எனக்கு
என்னுள் இருந்துகொண்டு
என்னையே ஆட்டிபடைக்கும்
மனசிடமிருந்து!

|

This page is powered by Blogger. Isn't yours?