<$BlogRSDURL$>

22.4.04

Life நட்பு+=வலைப்பூ; 

காலை மாலை
ஏன் இரவிலும்
எந்த நேரமும்
சந்திப்போம்
விடியலை தாண்டியும் உரையாடுவோம்
பட்டம் பெற்றோம்
வெவ்வேறு உலகம் ஆனோம்
மின்னஞ்சல் பரிமாற்றம்
எப்போதாவது நடக்கும்.
"How are u?!
I am fine.
How is work going on.
Have a nice day."
இதுவே அதன் சாராம்சம்.
வறண்டு விட்ட உறவானது.
ஜீவனற்ற உயிரானது.
ஆனால் இன்று நட்பு
புத்துயிர் பெற்று
தமிழே ஜீவனாகி
"வலைப்பூ"வாய் பூத்திருக்கிறது!



|

ஜனனம் 

உயிரிருக்கும் வரை நிற்காமல்
தினம்தினம் ஏன்
நொடிக்கொரு முறை
ஓர் ஜனனம்
உலகெங்கும் குடும்பக் கட்டுபாடில்லை
எண்ணங்களை
பிரசவிக்கும் மனசுக்கு.

|

இது தான் "மயை"யா? 

மாரி பொழியும் வேளையில்
மயிலின் நடனம்
மந்தகாசப் புன்னகையில் புதுமணப்பெண்கள்
மண்வாசனையின் இன்ப வீச்சு
மனதோரமாய் ஒரு எண்ணக்கீற்று
முதன்முதலாய் பார்த்த மழை எப்போது?
மின்னல் இடியில் நடுநடுங்கி - நான்
"ம்மாவின்" இடுப்பில் கொடிபோல் தொற்ற
முந்தானையால் காபந்து செய்து அவள்
முன்வாசலுக்கு என்னை அழைத்துப் போக
மலங்க மலங்க விழிகள் உருட்டி
மழலை மாறாமல் நான் கேட்டேன்
ம்மா! ம்மா! இது தான் "மயை"யா? (மழையா).

|

This page is powered by Blogger. Isn't yours?