18.4.18
மதியில் விஞ்சி நிற்பவரே !!
போர் புரிந்த யாரும்
நெஞ்சில் உரம் மிக்கவரே
இன்று போராடும் யாவரும்
மதியில் விஞ்சி நிற்பவரே
வாளுக்கு வேலையா ? ம்ஹூம் !!
ஆட்களுக்கு வேலை தேவை
தவித்த வாய்க்கும் காய்ந்த மண்ணிற்கும்
தண்ணீர் தேவை !!
பெண்களுக்கு பாதுகாப்பு தேவை
மக்கள் எல்லோருக்கும்
சுய தகவல் திருடா
சேவை தேவை!!
மண்வளம் காத்திடும்
வழிவகை தேவை
உழவனுக்கு இங்கு ஓர்
உயிர்வழி தேவை
உணரா தலைவர்களின்
மதச்சாயம் உரித்து
நெஞ்சுரம் கூட்டி உண்மை அறிவித்து
உரைக்கச் செய்யும் உன்னதம் தேவை.
இதை உணர்ந்து ..
இன்று போராடும் யாவரும்
மதியில் விஞ்சி நிற்பவரே !!
மதியில் விஞ்சி நிற்பவரே !!