<$BlogRSDURL$>

11.11.14

நம் சந்திப்பு !!! 

* நாம் உறங்காத

  இரவின் நீட்சி

  இன்னும்

  மிச்சம் இருக்கிறது.

* முன் இரவில் கேட்ட

   முகமறியா  பறவையின் குரல்

   மீண்டும்

  என்னுள்  ஒலிக்கிறது.

* பின் இரவு தாண்டியும்

  காற்றுபுகா  அருகாமையை  மார்கழி   குளிர்

  மேலும்

  நெருக்கி  இருக்கிறது.

* உதட்டளவில் தொடங்கி
 
   உள்ளம் கலந்து
 
   மேலும்

   உணர்வும் கலந்திருக்கிறது.

* நினைத்துப்  பார்த்தால்
 
   ஆச்சர்யமாகவும்

   மற்றும்

   ஆனந்தமாகவும் இருக்கிறது.

* நம்  சந்திப்பு

  எங்கு  யாரால்  எப்படி

  மற்றும்

  எப்போது  நிகழ்ந்திருக்கிறது.

* நாம் இருவரும்

  அந்த மாடிவீட்டில்

  மியாவ் மியாவ்  ர்ர்ரர்ர்ர்ர் !

  என்று  அந்த எலியை துரத்திய போதுதானே!




|

This page is powered by Blogger. Isn't yours?