<$BlogRSDURL$>

25.6.04

பதியம் போட்ட உணர்வுகள் 

என்றோ பதியம் போட்ட
உணர்வுகள்
உணர்ச்சிக் குவியலாய்
பாதுகாத்த
உள் தனலை
எரிமலை கக்குவதுபோல்
சில சமயம்
கோபமாய்
முரட்டுக் காதலாய்
ஆனந்த கண்ணீராய்
ஆழ்ந்த அரைவணைப்பாய்
பொங்கிப் பெருகும் அன்பாய்
வெடித்துச் சிதறும் அழுகையாய்
அலைகளாடும் நடனமாய்
வெற்றியின் தூண்டுகோலாய்
இப்படி ஏதாவது ஒன்றாய்
அல்லது எல்லாமுமாய்
வெளிபட்டுக்கொண்டே இருக்குமன்றோ?

|

24.6.04

மனத் தொடர்பியல் ! (Mind communication) 

நிசப்தம் மட்டுமே சாட்சியாகும்
இரவுகளில்
துணை தேடும்
தேரைகளின் ஒலி
கணவனின்
மனதின் ஓரத்தில்
எழுப்பும்
அலைகள்
பிரசவத்திற்கு தாய்வீடு சென்ற
அவளைச் சென்றடையுமா?

|

21.6.04

என் Brownies ! 

ஒரு பதினைந்து இருபது வருடங்களா(?!!!!!!!) ஒரு சந்தேகம் இருந்தது. அது ஒரு வழியா இதோ இப்போ ஒரு பத்து நிமிடங்கள் முன்னர் தான் தீர்ந்தது. என்னன்னு கேட்கிறீங்களா? அது வந்துங்க இன்னைக்கி கல்லூரிவிட்டு வீட்டுக்கு வந்து வயித்தை ஒரேயடியா நிரப்பிட்டேன். உடனே நித்திரா தேவி தாலாட்டு பாட தொடங்கிட்டாங்க.என்னடா நிறைய வேலை இருக்கேன்னு..காலார (கால்ரா இல்லைங்க!!) ஒரு நடை போகலாம்னு கிளம்பினேன்.


கோடைமழை ஏற்கனவே பெய்துவிட்டதால பச்சைபசேல்ன்னு இந்த ஊரே பார்க்க அழகா இருக்கு.ஒரு பத்து அடி நடந்ததும் கூடவே "நடைமனிதன்" (அதாங்க walkman) எடுத்துட்டு வந்திருக்காலமேன்னு யோசிச்சேன். கொஞ்ச நேரத்துலேயே அது தேவையில்லைனு தெரிந்தது. இயற்கை இன்னும் இங்க சீர்குலையவில்லை. குயில்களின் குரல்களும் மற்ற பறவைகளின் கிச்கிசு..ச்ச்ச்..சுசு... ஓசையும்/இசையும் என்னை எங்கேயோ அழைச்சிட்டு போய்யிடுச்சு. திடீர்ன்னு கொழுகொழுன்னு ரெண்டு அழகான முயல்கள். நல்ல filter காப்பி நிறத்தில். அட அதுங்களுக்கு Brownies- நு பேரே வச்சிட்டேன்.


உடனே முயல் ஆமை கதை தான் நினைவுக்கு வந்துச்சு. பிறகு TV சீரியல் கணக்கா ஆரம்ப பள்ளி தொடங்கி மேல்னிலைபள்ளி வரை நான் பார்த்த "கூண்டில் அடைபட்ட முயல்கள்" ஒவ்வொன்றாய் கண்ணீர் சிந்திச்சுங்க. சீமைபுல் தின்றுவிட்டு கூண்டுக்குள்ளே சுத்தி சுத்தி வருங்க. அப்ப வந்துச்சுங்க நம்ம சந்தேகம் என்னடா உண்மையிலேயே முயல்களால் ஓட முடியுமான்னு?


Brownies-ஐ பார்த்தவுடன் திரும்ப அதே சந்தேகம். மெல்ல மெல்ல அருகே போனென். அதுங்க என்னை கண்டுக்கிட்டதாவெ தெரியலை. இரண்டும் காதல் வசனம் பேசிகிட்டு இருந்துச்சோ என்னவோ? அப்பப்போ பக்கவாட்டில் இருந்த புற்களை ஒரு கடி. ச்ரக் ச்ரன்னு ஒரு சத்தம்(என்னொட shoes தான்). காணவே காணோம்! போயே போச்! போயிந்தே ! Is gone !என்னோட Brownies தங்களால் ஓட முடியும்ன்னு நிரூபித்து விட்டன .அதுங்களோட ஓட்டத்துக்கு முன்னாடி P.T. உஷா நிற்க முடியாது. ஒரு வழியா என் சந்தேகமும் தீர்ந்துச்சு.ஆனால் என் Brownies-அ மறுபடியும் பார்க்க முடியுமா?!!!


|

This page is powered by Blogger. Isn't yours?