<$BlogRSDURL$>

8.1.19

யாவருக்குமோர் பொதுமொழி 

தாயின் மொழி அன்பு
தந்தையின் மொழி உழைப்பு
ஆசானின் மொழி அறிவு
தாரத்தின் மொழி காதல்
தனயனின் மொழி பாசம்
நட்பின் மொழி பகிர்தல்
உறவின் மொழி உணர்வறிதல்
யாவருக்குமோர் பொதுமொழி தமிழ் அன்றோ!!

|

நெடுவானில் தோன்றும் நட்சத்திரங்கள் 

நெடுவானில் தோன்றும் நட்சத்திரங்கள் யாவும்
உடனே உன் வாசல் வந்திட வேண்டும்
விட்டுச்சென்ற மாமன் வீடுசேரும் முன்னே
ஒன்றொன்றாய் தொடுத்து மாலைகளாக்கிட  வேண்டும்.

விடிவெள்ளி முளைக்கும் முன்னே நீ
வானை உற்று நோக்க வேண்டும்
 நட்சத்திரங்களைக் காணாமல் வானவர்  தேடக்கூடும்
உன் கையிலுள்ள மாலைகளை பறித்துவிடக்கூடும்

பத்திரமாய் நீயும் அதை பாதுகாக்க வேண்டும்
மாமன் சொன்ன உத்தியொன்றுண்டு கேட்டுக்கோ
மாலைகளை நிலவுபோலாக்கி நீ விண்ணில் ஏவ வேண்டும்
அதற்குமுன் உன் கூந்தல் நுனி கொண்டு முடிந்திட வேண்டும்

வானவர் யாவரும் இரு நிலவு ஏது என்று குழம்ப  வேண்டும்.
உண்மையில்  நிலவு  நீயே என்று உலகறிய வேண்டும்.

|

முதியோர் இல்லம் 

 முன்னேற்றியவனை
இறக்கி விட்டான்
முதியோர் இல்லத்திலே!
முடமானது அவனது
தந்தையல்ல
அவன் மனம் தான்! 

|

குளிர் -வெப்பம் 

என் உயிருள்
உறைந்து விடு
உணர்வுள் கலந்துவிடு
அன்பு முழுதும்
கொட்டித் தீர்த்துவிடு
கடும் குளிர் காலத்தில்
கொஞ்சமேனும் வெப்பம் மிஞ்சட்டும்.

|

haikoooh... 

விளக்கம் கொடுப்பதிலும்
விலகி நிற்பதிலும்
விளங்கிவிடுகிறது உறவின் ஆழம்.
--------------------------------------------------------------------
கொட்டித் தீர்த்தது மழை
அனைவரும் நனனந்திருந்தனர்
அவனது நெஞ்சில் மட்டும் ஈரமில்லை.
-----------------------------------------------------------------------
உரிமைகளோ உணர்வுகளோ
தேவைகளே
அதன் வெளிப்பாட்டை தீர்மானிக்கின்றன.
-----------------------------------------------------------------------------


|

haikooh...... 

 புலப்படும் பெருங்கடலைத் தாண்டி
ஏனோ நான்
உருவமற்ற காற்றை ரசிக்கிறேன்
அந்தக் கடற்கரைக் காற்றில்
அனைத்தும் கரைந்து போகிறது.

-------------------------------------------------------------------------
 ஓர் மரணம்
பல கொலைகளை நிகழ்த்திவிடுகிறது
தெருவெங்கும் பூத்தூறல்.

-------------------------------------------------------------------
வெள்ளையடிக்கப்பட்ட சுவற்றில்
 எஞ்சியுள்ள ஆனிகளிடம் கேளுங்கள்
அந்த பழம்பெரும் வீட்டின்
சரித்திரத்தை அவை சொல்லக்கூடும்.
----------------------------------------------------------------------
உண்மையில் எந்த புள்ளியில் துவங்கி
எத்தனையாவது புள்ளியில் நிறைவடையும்
வாழ்க்கைக் கோலம்.

|

விடைத் தெரியாகேள்வி  

முன்னெப்போதும் இல்லாது
இப்போதெல்லாம் மூழ்கிப்போகிறேன்
சொற்களுக்குள்
வியந்து நிற்கிறேன்
இது ஒரு
விபரீத விளையாட்டாய்
தோன்றுகிறது
ஏனனய பணிகள்
தேங்கி விடுகின்றன
இதுவே உன் பணி
என்கிறது மனம்
நான் எதை
விட்டு விலக?
எதைத் தொடர?
விடைத் தெரியாகேள்வி என் முன் ஒய்யாரமாய்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது!!

|

தொலைந்து போகிறேன் 

உள்ளே தேட தேட
தொலைந்து போகிறேன்
அடர்ந்த காட்டில்
ஆழ்ந்த இருட்டில்
ஏதோ ஓர் ஒளிக்கீற்று
தோன்றி தோன்றி மறைகிறது
அதனை இலக்காய் கொண்டு
தேடல் தொடர்கிறது.

|

உன் வாசனன 

ஒவ்வொரு சுவாசத்திலும்
உன் வாசனன
வந்து வந்து போகிறது
உன் இதயம் என்னிடமல்லவா இருக்கிறது.

|

வாழ்க்கை செப்பனிடாத பாதை 

வாழ்க்கை செப்பனிடாத பாதை
யோசித்துப் பார்க்கையில்
இறந்த காலங்களில்
நான் சுவாசித்து மட்டுமே இருக்கிறேன்
இன்று வாழ முற்படுகின்றேன்
இதை உலகுக்கு அறிவிக்க வேண்டும்
குறைந்தபட்சம் அறிமுகமாவது செய்ய வேண்டும்
காலசுழற்சியில் ஓர் அழியாச்சுவடு பதிக்க வேண்டும்
பயணம் கரடுமுரடானதுதான்
அதைத் தவிர்த்தல் முட்டாள்தனமானது
ஒவ்வொரு பயணித்திலும் எஞ்சியிருப்பது அனுபவம்
பயணிக்காதவனிடமோ எதுவும் இருப்பதில்லை
ஆனால் அனுபவங்கள் சுவாரசியமானவை.
ஆகவே யாது செய்ய வேண்டும்?

|

haikooh-5 

[00:48, 1/7/2019] kumaresan:

மேஜையின் ஒரு புறம்
தீர்மானிக்கிறது
நீ எந்த வர்க்கமென்று!!

[01:27, 1/7/2019] kumaresan:
அவள் வருகை
கோயில் கருவறையில் தீட்டென்றும்
அவன் வருகை
அவள் கருவறையில்
ஜனனமென்றும்
பதிவு செய்யப்படுகிறது.

[01:28, 1/7/2019] kumaresan:
பெரும்புயல் கடந்தும்
நிற்கும் மரங்கள்
முதியவர்கள்!

[01:48, 1/7/2019] kumaresan:
 வாழ்க்கை
செப்பனிடாத பாதை
பயணம் கரடுமுரடானதுதான்!!

[02:06, 1/7/2019] kumaresan:
 கனப்பொழுதில் விலகிவிடுகின்றன
 உறவுகள்
உங்கள் உரையாடல் பட்டிமன்றமாகும்போது!!

[02:17, 1/7/2019] kumaresan:
 வெளியிடா உணர்வுகளின்
விபரீதக் களஞ்சியம்
மன அழுத்தம்!

|

கண்ட காட்சிகளே கனவுகள் 

கனவுகள் மலரும் சோலையிலே
காட்சிகளாய் சில நினைவுகள்
அன்பாய் சில அரவனணப்புகள்
ஆக்ரோஷமாய் சில உரையாடல்கள்
இலைமறைவாய் சில அத்துமீறல்கள்
ஈட்டியாய் சில வசவுகள்
உண்மையாய் சில உறவுகள்
ஊமையாய் சில நிஜங்கள்
எல்லாம்தெரிந்த சில ஞானிகள்
ஏதுமற்ற சில ஏழைகள்
ஐயமுற்ற சில பொழுதுகள்
ஒளிப்பொருந்திய சில கண்கள்
ஓங்காரமொலிக்கும் சில கோயில்கள்
ஒளவைக்கிழவியின் சில வரிகள்
கண்ட காட்சிகளே கனவுகள்
காலமே நீயே அதன் எஜமானன்.

|

புத்தாண்டில் வாழ்த்துகிறேன்!!-2019 

வாழ்த்துகிறேன் நட்புகளே உறவுகளே
அன்பாய் அழகாய்
ஆழ்மனதிலும் ஆனந்தமாய்
இனிமைமிகு இல்லறமுமாய்
ஈடிணையில்லா ஈயும்நட்புகளால்
உரிமைமிகு
உறவுகளால்
ஊக்கமிகு ஊர்மக்களால்
எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
ஏற்றமிகு ஏணியாய்
ஐவர்போல் ஐயமிட்டும்
ஒப்புரவில் ஒருமைப்பட்டும்
ஓராயிரத்தில் ஓராளாய்
ஒளஷதமும் கடுகலளவாய்கொள்ளும்
எ:.குபோன்ற உறுதியுடன்
வலிமைமிகு வளமைமிகு
நல்வாழ்வு உங்களுக்கு அமைந்திட இந்தப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்!!

|

மீண்டு வந்தேன் 

மீண்டு வந்தேன்
மீண்டும் வந்தேன்
ஆழ்கடலில் தொலைத்ததாய்
ஆழ்ந்து இருந்தேன்
எனக்குள் நானே
என்னைத் தொலைத்திருந்தேன்
தொலைந்து போவதே
இன்பம் என்றிருந்தேன்
உள்ளே உள்ளே
சென்று வந்தேன்
உருக்கிய நினைவுகளை
அழித்து வந்தேன்
அறிந்தேன் தெளிந்தேன்
தேடுபவர் யாருமிலர்
(உன்னை) நீயே தேடு
மீண்டு வந்தேன்
மீண்டும் வந்தேன்.

|

haikooh-4 

அலைபாய்கிறது
அசைபோடுகையிலும்
பதின்பருவ நினைவுகள்.
-----------------------------------------------------------

 அரைவயிறு நிரப்புகிறது
பகுதி நேர
வேலை.

--------------------------------------------------
சுட்டெரித்தாலும்
விலகா நிழல் போல்
என்றென்றும் உன் நினைவுகள்.

|

Haikooh-3 

திசைமாறிய பறவைகள்
இரண்டு இளைப்பாறியது
கசாப்புக் கடையில்.

-------------------------------------------------------------

தாலி
பாதுகாப்பாய் இருக்கிறது
மார்வாடிக் கடையில்.

---------------------------------------------------------------
யாரும் தப்பிக்கலாம்
சட்டங்கள் அற்றது
இந்த ஜன்னல்.

--------------------------------------------------------------
சில முகவரிகள் தொலைந்ததால்
முயற்சிகள் கூடின
சுய முகவரிக்காக!!
------------------------------------------------------------
மனம்
ஒரு வழிப்பாதையானால்
மயானம் வெகுசமீபத்தில்.

|

குழந்தையும் தெய்வமும் 

நிலவொளியில் அவள்
முகம் பார்க்க்- அசைந்தாடியது
அவளது நிழலல்ல என் நிஜம்( மனம்).
பிள்ளைப்பாதம் வைத்தவள்
அத்திருத்தலத்தில் நடைபயிலவில்லை
மெல்ல மெல்ல
எனது உள்ளம் பெயர்த்தாள்.
இறைவன் முன் நின்றவள்
தேனருவியெனப் பொழிந்தாள்
அது கானமல்ல அவனுக்கும் அவளுக்குமான உரையாடல்
குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவோ!!

|

இது அவள் வருவதற்கான நேரம் 

இது அவள் வருவதற்கான நேரம்
பூங்காற்றே சற்று ஓய்வெடுங்கள்
புள்ளினமே ஒலி எழுப்பாதீர்கள்
திக்கற்ற காற்றில் அவளுக்கு திசையறிவியுங்கள்
அவளது மெளன மொழிகளால்
அமைதி அமைதி உள்ளும் புறமும்
பேரிரைச்சல் எதற்கு
பெருங்கவலை விலக்கு
இதோ வந்துவிட்டால் நித்ராதேவி!!

|

Haikooh-2 

சில வாசல் கதவுகள் மூடினாலென்ன?
பல மாளிகை கதவுகள் தன்னால் திறக்கும்
திறமையுள்ளவர்களுக்கு.
----------------------------------------------------------------------------
கனவில் கூட தரமாட்டேன்
உன்னிடம் களவாடிய
இதயத்தை!!
-------------------------------------------------------------------------------
இது விடியலுக்கான நேரம்
கிழக்கே உதிப்பவன்
உன் சிந்தையில் உதித்தால்
நீயும் அறிஞனே!!
--------------------------------------------------------------------------------


|

காற்றோடு நீ கரைந்து போனாய் 

காற்றோடு நீ கரைந்து போனாய்
அந்த ஒரு மின்னல் ஒளியில்
உன் விழிகள் மட்டுமே
நினைவில்
தேடி தேடி அலைகிறேன் தவிப்பில்
ஏனோ அந்த மின்னல்
வரவேயில்லை
(உன்) விழிகளே என்னுள் மீண்டும்- மீண்டும் பிரகாசிக்கின்றன.!!

|

Haikooh!!! 

 நீண்ட பயணத்தில்
 சில நிறுத்தங்கள்
 பள்ளி, கல்லூரி மற்றும் வேலையிடம்.
  -----------------------------------------------------------------------------

 நிறம் மாறிய பூ
 மழையில் நனைந்த மழலையின்
குறுஞ்சிரிப்பு.

---------------------------------------------------------------------------------
 விதவிதமாய் பார்வை
பொருள் ஒன்றுதான்
அது நன்றாயில்லை!

--------------------------------------------------------------------------------

 மீண்டும் ஒருமுறை
உனக்காக காத்திருக்கிறேன்
வாசல் வழி சென்ற நீ
ஜன்னல் வழி வந்துவிடு
என் ஸ்வாசக் காற்றே!!
-------------------------------------------------------------------------------------------

கீழே கொட்டினாலும்
மேலேறி தாகம் தணிக்கிறாள்
இளநீர்.!!

|

This page is powered by Blogger. Isn't yours?