<$BlogRSDURL$>

15.4.04

இலையுதிர் காலம்! 

இலையுதிர் காலம்!
இருந்தும்
உதிர்க்க முடியவில்லை
அந்த மரங்களை போல்
அவனால்!
உணர்வுகளை!.

|

1000 குழந்தைகள்?! (சின்னஞ்சிறு கதை) 

ஆயிரம் குழந்தைகள்?!
அவளுக்கு
இன்னும் மணமாகவில்லை!
எப்படி சாத்தியம்!
ஒரே சலசலப்பு!
அந்த கிராமத்து வீட்டிலே!
பெண் பார்க்க வந்தவன்
கிளம்பத் தயாரானான்!
"1000" ஓவியங்களை அவள் நீட்ட
அவன் நெளிந்தான்.
படைப்புகள் கலைஞனுக்கு குழந்தைகள் அன்றோ?

|

"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா? 

மனசே என் மனசே
எதை நீ தேடுகிறாய்?
சொல்லிவிட்டுத் தேடு!
கரங்கள் உண்டு சேவை செய்ய!
கண்கள் உண்டு கண்டு சொல்ல!
ஒருவேளை...
உணர்வை நீ தேடினால்?!!
நான் என்ன செய்ய?!
அது உன்னில்லிருந்தே பிறக்கிறது!
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?

|

13.4.04

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 

அன்பு நட்பு உள்ளங்களே!
அன்பும் பண்பும்
குணமும் ஓங்கி
வாழ்வில் என்றும்
மன மகிழ்ச்சியோடு
எல்லா வளத்துடன்
அனனவரும் செழிப்புடன்
வாழ தாரண தேவி
அருள் புரிவாள்.


|

This page is powered by Blogger. Isn't yours?