27.3.04
நட்சத்திரங்கள்?!
என் மன வானில்
எத்தனை
நட்சத்திரங்கள்?!
ஒவ்வொன்றாய்
எண்ணிப்
பார்க்கிறேன்.
பள்ளிப்பருவம்
தொட்டு
பால்ய காலம்வரை!
கல்லூரி
முதல்
இன்று வரை.
சில நேரம்
மட்டும்
அவை பிரகாசிப்பதுண்டு.
பல நேரம்
அவை
என்னைச் சுட்டெரிக்கின்றன.
இருந்தாலும்
அனைத்துமே
என்னைச் சேர்ந்தவை.
எவரிடமும்
அதை
கொடுத்து விட முடியாது.
பிடிக்கவில்லை
என்று
தூக்கியெறியவும் இயலாது.
என்னுள்
என்னோடே
பின்னப்பட்டு இருப்பவை
|
என் மன வானில்
எத்தனை
நட்சத்திரங்கள்?!
ஒவ்வொன்றாய்
எண்ணிப்
பார்க்கிறேன்.
பள்ளிப்பருவம்
தொட்டு
பால்ய காலம்வரை!
கல்லூரி
முதல்
இன்று வரை.
சில நேரம்
மட்டும்
அவை பிரகாசிப்பதுண்டு.
பல நேரம்
அவை
என்னைச் சுட்டெரிக்கின்றன.
இருந்தாலும்
அனைத்துமே
என்னைச் சேர்ந்தவை.
எவரிடமும்
அதை
கொடுத்து விட முடியாது.
பிடிக்கவில்லை
என்று
தூக்கியெறியவும் இயலாது.
என்னுள்
என்னோடே
பின்னப்பட்டு இருப்பவை
26.3.04
வெளிநாட்டு மாணவர் வாழ்க்கை
உள்ளம் முழுக்க கனவுகளுடன்
கால் பதித்தோம் இங்கே!
சிதறிய ஓர் மாதுளையின் முத்துகளாய்
ஒவ்வொருவரும் ஓர் திசையில்.
லட்சியங்கள் வென்றிட அனுதினமும்
அயராது உழைக்கிறோம் இங்கே!
புதிய கலாச்சாரம் ! வாழ்க்கை முறை!
எங்களை எங்கோ அழைத்து செல்கிறது!
சில பிறழ்வுகள் விரும்பியும் விரும்பாமலும்
அடிமனசிலே ஓர் இனம்புரியா வெறுமை
மாமியார் வீடு வந்த மாட்டுப்பெண் போல
என்று ? அது நீங்கும் ?!!
அறியாமலே நகர்கிறது நாட்கள்!
ஏன் எங்கள் வாழ்க்கையும் தான்.
நாற்றங்காலாய் இருக்க விழைகிறோம்
(இந்த)அரசாங்கமோ எங்களை வேரறுத்த மரமாக்குகிறது.
இது சரியா? தவறா? குரலெழுப்பவும் வழியில்லை!
எனினும் முளைத்திடல் வேண்டுமல்லவா?
ஏதோ ஓர் நம்பிக்கையுடன் இங்கே
யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்! வெற்றி பெறுவோம்!
|
உள்ளம் முழுக்க கனவுகளுடன்
கால் பதித்தோம் இங்கே!
சிதறிய ஓர் மாதுளையின் முத்துகளாய்
ஒவ்வொருவரும் ஓர் திசையில்.
லட்சியங்கள் வென்றிட அனுதினமும்
அயராது உழைக்கிறோம் இங்கே!
புதிய கலாச்சாரம் ! வாழ்க்கை முறை!
எங்களை எங்கோ அழைத்து செல்கிறது!
சில பிறழ்வுகள் விரும்பியும் விரும்பாமலும்
அடிமனசிலே ஓர் இனம்புரியா வெறுமை
மாமியார் வீடு வந்த மாட்டுப்பெண் போல
என்று ? அது நீங்கும் ?!!
அறியாமலே நகர்கிறது நாட்கள்!
ஏன் எங்கள் வாழ்க்கையும் தான்.
நாற்றங்காலாய் இருக்க விழைகிறோம்
(இந்த)அரசாங்கமோ எங்களை வேரறுத்த மரமாக்குகிறது.
இது சரியா? தவறா? குரலெழுப்பவும் வழியில்லை!
எனினும் முளைத்திடல் வேண்டுமல்லவா?
ஏதோ ஓர் நம்பிக்கையுடன் இங்கே
யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்! வெற்றி பெறுவோம்!
25.3.04
கிரிக்கெட் வெற்றி
கொண்டாடு மனமே
நீ கூத்தாடு
வெற்றி நமதே
வெற்றி நமதே!
சங்கே நீ முழங்கு
சரிகம பத பாடு
இந்தியா வென்றது
இந்தியா வென்றது.
திக்கெட்டும் பரவட்டும்
வீரர்களின் புகழ்மாலை
வாழ்க நம் வீரர்
வாழ்க நம் வீரர்
ஏழு வருடங்களுக்கு பின்
நாம் கண்ட வெற்றி
ஏளன பார்வைக்கு
கொடுத்து விட்டோம் வட்டி.
வாழ்க நம் வீரர்
வாழ்க நம் வீரர்.
|
கொண்டாடு மனமே
நீ கூத்தாடு
வெற்றி நமதே
வெற்றி நமதே!
சங்கே நீ முழங்கு
சரிகம பத பாடு
இந்தியா வென்றது
இந்தியா வென்றது.
திக்கெட்டும் பரவட்டும்
வீரர்களின் புகழ்மாலை
வாழ்க நம் வீரர்
வாழ்க நம் வீரர்
ஏழு வருடங்களுக்கு பின்
நாம் கண்ட வெற்றி
ஏளன பார்வைக்கு
கொடுத்து விட்டோம் வட்டி.
வாழ்க நம் வீரர்
வாழ்க நம் வீரர்.
நண்பர்களின் படைப்பு
இன்பம் பொங்கி வழிந்ததே
துன்பம் எல்லாம் தொலைந்ததே
தங்கு தடையின்றி இணையத்திலே
தமிழில் நானும் எழுதிடவே.
நண்பர்கள் படைப்பை கண்டதும்
உள்ளம் குழந்தையாகி குதித்ததே
கவிதை படைக்க துடித்ததே
ஆற்றல் கொண்டு எழுந்ததே!
பக்கம் பக்கமாய் எழுதிடு
பாரெங்கும் பதித்திடு
உணர்வுகள் பகிர்ந்திடு
உவகைகள் அடைந்திடு!
என்று என் மனம்
எனக்குச் சொன்னது
அதுவே கவியாய் அமைந்தது
மீண்டும் சந்திப்போம்!
|
இன்பம் பொங்கி வழிந்ததே
துன்பம் எல்லாம் தொலைந்ததே
தங்கு தடையின்றி இணையத்திலே
தமிழில் நானும் எழுதிடவே.
நண்பர்கள் படைப்பை கண்டதும்
உள்ளம் குழந்தையாகி குதித்ததே
கவிதை படைக்க துடித்ததே
ஆற்றல் கொண்டு எழுந்ததே!
பக்கம் பக்கமாய் எழுதிடு
பாரெங்கும் பதித்திடு
உணர்வுகள் பகிர்ந்திடு
உவகைகள் அடைந்திடு!
என்று என் மனம்
எனக்குச் சொன்னது
அதுவே கவியாய் அமைந்தது
மீண்டும் சந்திப்போம்!
22.3.04
Hello friends ! I love nature.I would like to travel a lot.I write poems,rather it is my feelings.I would like to share some of them with you.I would like to write a lot.Also i welcome your comments and ur suggestion on it.You can also suggest me books to read on to improve my kavithai skills.
Hope we will have a nice time.
With love,
kavivalar
Panimalai !
Vellaadai Kattikonda
Velinattu pennoruthiyai
Vetkamilal verithu paarkiren!
|
Hope we will have a nice time.
With love,
kavivalar
Panimalai !
Vellaadai Kattikonda
Velinattu pennoruthiyai
Vetkamilal verithu paarkiren!