8.7.15
வாழ்க்கை
வாழ்க்கை
எல்லோர் பயணமும் ஓரிடத்தில்
ஒரே இடத்தில்
நிறைவடைகிறது .
காற்று போன பின்னே
காடு மட்டுமே
வாவென்று அழைக்கிறது.
காற்று உள்ள வரை
உலகம் முழுக்கச்
சுற்றி அலைகிறோம்.
ஆறடி மட்டுமே நிஜமென்றாலும்
ஏதோ ஒன்று
இழுத்துச் செல்கிறது.
இட்ட பெயர் தாண்டியும்
அடையாளம் தேடி
முயற்சிக்கின்றோம்.
இவ்வுலகில் இருக்கின்ற காலத்திலே
இல்லாத ஒன்றிற்காக
ஏங்குகிறோம்.
ஏக்கம் பாதி தேடல் மீதி
என்றே நாட்கள்
கழிந்து விடுகிறது.
உண்மையில் நாம் வாழ்வை
'பெயருக்காகவே '
வாழ்கின்றோம்.
கொண்ட உடலை மண்ணுக்களித்து
கொணராத பெயரை
கல்லறைக்கு அளிக்கிறோம்.
வாழ்வின் மிச்சம் 'பெயர்' மட்டுமே!!