<$BlogRSDURL$>

16.6.04

திறந்தவெளி அரங்கு! 

ஆஹா! இந்த வார்த்தைகள் எவ்வளவு நினனைவுகளை கிளறிக்கொண்டு வருகிறது. முதல்நிலை பள்ளி சென்று கொண்டிருந்த சமயம் கோடைகாலம் என்றால் ஒரே கொண்டாட்டம் தான்.அதுவும் மாரியம்மன் திருவிழா என்ற பெயரில் ஒலிபெருக்கி எப்போதும் அலறிக்கொண்டே இருக்கும்.வாரம் இருமுறை தெருவடைத்து இரண்டு கம்பு நட்டு பெரிய திரைகட்டி "999" முறையாக 'சரஸ்வதி சபதம்' படம் அரங்கேறும். பிடிக்குதோ இல்லையோ அந்த வயதில் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு அங்கே எப்படியும் போய்விடுவேன். அந்த கூட்டத்தில் படத்தை பார்ப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.சமயத்தில் அப்படியே தூங்கி விடுவதும் உண்டு.ஏதோ கூட்டு குடும்பமாய் இருந்ததில் தப்பித்தேன். அப்பாவோ சித்தப்பாவோ பெரியண்ணாவோ ஒவ்வொருவரும் முறை வைத்து என்னைத் தேடி வீட்டிற்கு தூக்கி வருவர்.


இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு முறை பலமாக காற்று அடித்தால் திரை "சமாதானக் கொடி"யாக மாறியிருக்கும்.அவ்வப்போது வருண பகவானின் விஜயமும் நடக்கும். அப்போது மட்டும் நானாகவே வீடு வந்து சேர்வேன்.(அழுதுகொண்டு... மழைக்கு டூ விட்டு).மேலும் பெரியார், அண்ணா பிறந்தநாள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கள் தெருவே திமிலோகப்படும். இரவும் பகலாக காட்சியளிக்கும்.(உபயம்: எங்கள் வீட்டு மின்சாரம், விளக்குகள்-எதிர் வீடு, நிர்வாகம்.....பெரியார் அண்ணா நினைவகம்). என்னமோ தெரியவில்லை இவர்வகளும் '999' முறையாக "ஓர் இரவு" அல்லது "அரச கட்டளை" படங்களையே அரங்கேற்றுவர்.எம்.ஜி.ஆர் இந்த ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார் என்று நினைத்ததுண்டு.


இன்று இருபது ஆண்டுகள் கடந்தோடி விட்டன. மாலையில் நண்பனொருவன் கல்லூரியில் யேர்மனி Vச் நெதர்லாந்து கால்பந்தாட்டம் திறந்தவெளி அரங்கில் ஒலி-ஒளி செய்யப்படும் என்றான். கேட்டவுடன் மனம் துள்ளிக் குதித்தது. அவை கிளறிய நினைவுகளே மேலே!! கால்பந்தாட்டம் முடிந்தவுடன் சூட்டோடு சூட்டாக இந்த பதிவு. ஆட்டம் துவங்கி முதல் 30 நிமிடத்துக்குள் யேர்மன் பாலக் ஒரு கோலை போட்டுவிட்டார். மேலும் 15 நிமிடம் பந்து அங்கும் இங்கும் சென்றதே தவிர கோல் என்ற ஒன்று மட்டும் விழவேயில்லை. பாவம் நெதர்லாந்துக்காரர்கள் சற்று திணறித்தான் போனார்கள். இடைவேளைக்கு பிறகு உஷாராகிவிட்டார்கள். பந்து இவர்களிடமே நீண்ட நேரம் உதை வாங்கியது(இருந்தும் பந்திற்கு பதிலாக அடிக்கடி எதிரணி வீரர்களின் பாதம் துவங்கி தலை வரை தங்களின் முத்திரை பதித்தனர்)என்ன செய்து என்ன பயன்? கோலை சமன் செய்யவே 78 நிமிடங்கள் ஆகிவிட்டது. கடைசி 12 நிமிடங்ள் விறுவிறுப்பாக கழிந்தன. 1 - 1 என்ற கோல் கணக்கே நீடித்தது. 2 நிமிடம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.இருந்தும் பயனில்லை ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.


|

14.6.04

ஆணவம் விட்டொழி ! (ego) 

இதயம் ஒன்று உண்டா உனக்கு?
என்ன நினைக்கிறாய்?
என்ன செய்கிறாய்?
சிந்தனை என்பதை என்று நீ மறந்தாய்?
யாரை பின் பற்றுகிறாய்?
எதை நோக்கிப் போகிறாய்?
யாருமற்ற தீவில் உனக்கென்ன வேலை?
மனிதம் தொலைத்து விட்டாயா?
அன்பு என்றால் அறிவாயா?
காதலைத்தான் உணர்வாயா?
நட்பின் ஆழம் புரியாதா?
உழைப்பின் உன்னதம் உரைக்கவில்லயா?
உயிர் வாழ்தல் மட்டும் கடமையா?
ஏகாந்தம் உனது பிறப்பிடமா?
சோம்பல் என்பது உன் சொத்தா?
ஒழுங்கீனமே உன் ஒழுக்கமா?
இதனால் என்ன கண்டாய் நீ?!!!


|

This page is powered by Blogger. Isn't yours?