10.9.14
உறவின் (ஸ்)வாசம்
மெல்ல பூக்கிறது
ஓர் உறவு
வானுக்கும்
மண்ணுக்கும்
சாரல் மழை!
உள்ளே பரவுகிறது
ஓர் மணம்
ஊருக்கும்
உறவுக்கும் (ஆன )
மண் வாசம்!
ஊடே விரிகிறது
ஓர் மௌனப்படம்
பால்யக் காலம் தொட்டு
இன்றுவரக்கும்மான
மழையின் நியாபகங்களாய் !
கூடவே வைக்கிறது
ஓர் கோரிக்கை
ஒவ்வொரு நியாபகமும்
அதன் நீட்சியும்
'ஒலி ' கொடு எனக்கு 'உயிர்' கொடு என்று !
கேட்டு தடுமாறுகிறது
மனசு - பாவம்!
அதனால் காட்சிக்கு க் காட்சி
தோழனாய் தோழியாய் தாயாய் தந்தையாய்
காதலன் காதலியாய் சகோதரன் சகோதரியாய்
சேயாய் துணையாய் எல்லாமுமாய்
மாறி மாறி குரல் 'ஒலி ' எழுப்ப முடியமா என்ன?
ஒவ்வொரு மழையும் ஓர் உறவின் (ஸ்)வாசமல்லவா ?!!
ஓர் உறவு
வானுக்கும்
மண்ணுக்கும்
சாரல் மழை!
உள்ளே பரவுகிறது
ஓர் மணம்
ஊருக்கும்
உறவுக்கும் (ஆன )
மண் வாசம்!
ஊடே விரிகிறது
ஓர் மௌனப்படம்
பால்யக் காலம் தொட்டு
இன்றுவரக்கும்மான
மழையின் நியாபகங்களாய் !
கூடவே வைக்கிறது
ஓர் கோரிக்கை
ஒவ்வொரு நியாபகமும்
அதன் நீட்சியும்
'ஒலி ' கொடு எனக்கு 'உயிர்' கொடு என்று !
கேட்டு தடுமாறுகிறது
மனசு - பாவம்!
அதனால் காட்சிக்கு க் காட்சி
தோழனாய் தோழியாய் தாயாய் தந்தையாய்
காதலன் காதலியாய் சகோதரன் சகோதரியாய்
சேயாய் துணையாய் எல்லாமுமாய்
மாறி மாறி குரல் 'ஒலி ' எழுப்ப முடியமா என்ன?
ஒவ்வொரு மழையும் ஓர் உறவின் (ஸ்)வாசமல்லவா ?!!