31.12.14
முயற்சி நம் ஸ்வாசம் !
உள்ளேயும் வெளியேயுமாய்
பரந்து விரிகிறது
உலகம்!
முடிவற்ற அவ்வெளியில்
உள்ளுக்குள் மலர்ந்து
வெளியெங்கும் பரவுகிறது
இன்பம்!
இதோ பிறந்துவிட்டது புதுவருடம்! வாழ்த்துக்கள்!!
குளத்தெறி கல்லென
அலைஅலையாய் எண்ணங்கள்
முடிவுற்ற ஆண்டின்
முயற்சிகளின் அணிவகுப்பாய் !!
நீண்டு நீண்டு செல்கிறது
அவை இந்த ஆண்டையும்
விட்டு வைக்கவில்லை
இனி வரவிருக்கும் ஆண்டுகளையும்தான்!
விளைவுகளுக்கு ஆட்படாத
இடைவிடாத முயற்சி
வெற்றிக்கனியை இல்லம் கொண்டு சேர்க்கிறது
முயற்சி நம் ஸ்வாசம் !
முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்!