16.2.11
புது பிறவி!
நான்
இம்முறை
எம்முறையுமில்லாக்
காற்றாய்
உன்னோடு கலந்த(து)
என் காதலைச் சொல்ல
என்னை நீ சுவாசிப்பாயா!
30.3.10
அவள் பெயர் என்ன?
இன்று
நீண்ட
இடைவெளிக்கு
பின்
எனக்கும்
அவளுக்குமான
காதல்!
அவள் பெயர் என்ன?
அவள் பெயர் தமிழ்.
14.8.06
Resume
8.7.04
முதுமையை வெல்ல முடியுமா?
நம்ம 90 வயசு வாலிபர் அல்போன்ஸுக்கும் அவர் மனைவி ஸோபிக்கும் வரும் ஜுலை 15, '60-ம் ஆண்டு திருமண நிறைவு விழா. அதுக்குள்ளே என்னாச்சோ தெரியலை. இரண்டு பேருக்கும் உடம்பு சரியில்லை. 10 நாட்களுக்கு முன் அவருக்கு இருதய இரத்த குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மனைவிக்கு Alzheimer (நினைவு பிறழ்ச்சி) நோய் திடீரென்று முற்றி விட்டது. மீண்டும் குழந்தையாவே ஆகிட்டாங்க. இதுதான் வாழ்க்கை சுழற்சியோ?! இருந்தாலும் அல்போன்ஸ் மனம் தளரவில்லை. அவரது மனைவியை இன்னும் அதிகமா நேசிக்கறாரு ! அன்பா கவனிசுக்கிறாரு. மண நாளுக்காண அழைப்பிதழ்களில் அவரே கைப்பட முகவரியை தட்டச்சிக் கொண்டிருக்கிறாரு. முதுமையை வெல்லும் மாமனிதர்!!
29.6.04
மருந்து நிறுவனங்கள் உங்களிடம் மறைக்க விரும்புவது என்ன?
நம்ம ஊர்ல இல்லைங்க! அமெரிக்காவுலேயே இப்படி நடக்குது?! புகழ்பெற்ற மருந்து நிறுவனமான Glaxosmithkline, " Paxil " என்ற மாத்திரையை மன நெருக்கடியைப் போக்குவதற்காகத் தயாரித்து வருகிறது. அதன் விளைவுகள் குறித்து சமீபத்தில் விஞ்ஞானிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டது. அதன் தொடர்பான சாதகமான முடிவுகளை மட்டுமே வெளியிட்டது. இதனிடையே உண்மை நிலவரம் வெளியே வந்துவிட்டது. கொடுமை என்னவென்றால் Paxil மன நெருக்கடியைக் குணப்படுத்துவதை விட இளம் சிறுவர்களிடையே தற்கொலை எண்ணங்களை தூண்டுவதை தனது முக்கிய கடமையாகக் கொண்டுள்ளது. Glaxosmithkline- ன் இந்த சுயநலப்போக்கை நியூயார்க் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி Eliot Spitzer வன்மையாகக் கண்டித்துள்ளார்.யாரைத்தான் நம்புவதோ?!!!
முழு விவரங்களை அறிய இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.
25.6.04
பதியம் போட்ட உணர்வுகள்
உணர்வுகள்
உணர்ச்சிக் குவியலாய்
பாதுகாத்த
உள் தனலை
எரிமலை கக்குவதுபோல்
சில சமயம்
கோபமாய்
முரட்டுக் காதலாய்
ஆனந்த கண்ணீராய்
ஆழ்ந்த அரைவணைப்பாய்
பொங்கிப் பெருகும் அன்பாய்
வெடித்துச் சிதறும் அழுகையாய்
அலைகளாடும் நடனமாய்
வெற்றியின் தூண்டுகோலாய்
இப்படி ஏதாவது ஒன்றாய்
அல்லது எல்லாமுமாய்
வெளிபட்டுக்கொண்டே இருக்குமன்றோ?
24.6.04
மனத் தொடர்பியல் ! (Mind communication)
இரவுகளில்
துணை தேடும்
தேரைகளின் ஒலி
கணவனின்
மனதின் ஓரத்தில்
எழுப்பும்
அலைகள்
பிரசவத்திற்கு தாய்வீடு சென்ற
அவளைச் சென்றடையுமா?